றம்ழான் பண்டிகைக்கு முன்பாக மீண்டும் பாரிய தாக்குதல்கள் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டப்லிஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் எச்சரிக்கையை எவரும் சாதாரண விடயமாகக் கருதி விடக்கூடாது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கை முழுவதையும் பதற்றமும் பயங்கரமும் பீடித்துள்ளது.
எந்த நேரம் எது நடக்குமோ என்ற ஏக்கத்தின் மத்தியில் மீண்டும் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாமென அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கைப்படுத்தியுள்ளமை இனி எங்கள் வாழ்வு ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கப் போகிறதா? என்ற வினாவை முன்னிறுத்தியுள்ளது.
அதிலும் எதிர்வரும் ஆறாம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகின்ற நிலையில், பள் ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீடு வந்து சேரும் வரையில் ஒவ்வொரு பெற்றோரும் உறவுகளும் ஏங்கி ஏங்கி வாழுதல் தவிர்க்க முடியாததாகிறது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தின் இறுதி நாட்களில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா தெரி வித்திருந்தது.
இதன்காரணமாக படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரமடைந்திருந்ததுடன் பொது மக்களும் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்திருந்தனர்.
இந்நிலையில் மே மாதம் ஆரம்பமாகியபோது, ரம்ழான் பண்டிகைக்கு முன்பாக மீண்டும் பாரிய தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்கா எச்சரித்திருப்பது இலங்கை மக்களுக்கு இனி நிம்மதி இல்லை என்பதாக நிலைமையை மாற்றியுள்ளது.
எதுஎவ்வாறாயினும் குண்டுத்தாக்குதல்கள் எப்போதும் இடம்பெறலாம் என்ற பதற்ற மான சூழ்நிலையானது சுமுகமான வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கவே செய்யும்.
எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற விடயத்தில் கடுமையாகக் கவனம் செலுத்து வது அவசியமாகிறது.
அதேநேரம் எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இங்குதான் பாடசாலைகளுக்கான விசேட பாதுகாப்புகள் தேவைப்படும். அதேநேரம் பாட சாலைகள் ஆரம்பிக்கின்றபோது போக்குவரத்துச் சேவைக்கான பாதுகாப்புப் பற்றியும் சிந் திப்பது அவசியம்.
தேவை ஏற்படின் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களுக்கான பாடசாலை ஆரம்பத்தை ஓரிரண்டு வாரங்கள் பிற்போடுவதுகூட பொருத்தமானதாக இருக்கும்.
இதுபற்றியயல்லாம் உடனுக்குடன் தீர்மானம் எடுக்கக்கூடிய தற்துணிவில் அதிகாரிகள் இருப்பதும் பாடசாலை சமூகம், கல்வித் திணைக்களம், பொலிஸ் தரப்பு, தீயணைப்புப் பிரிவு, மருத்துவ சேவை என்பவற்றுக் கிடையில் அதிவேகமான தொடர்பாடல் சேவை மிகச்சிறப்பான இயங்கு நிலையில் இருப்பதும் அவசியமாகும்.
(வலம்புரி)