டென்மார்க் Middelfart KulturØen நூலகத்தில் தமிழின அழிப்பை உணர்த்தும் கண்காட்சி !

0
623

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் டென்மார்கில் தொடர் கண்காட்ச்சி தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் ஆவணக் கண்காட்சிகள் Middelfart KulturØen நூலகத்தில் 30.04.19 தொடக்கம் 30.05.19 வரை வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும், ஆக்கிரமிப்புகளையும் இக் கண்காட்சி தாங்கி நிற்கிறது. அத்துடன் தமிழர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டும் பொருட்கள்,கலை கலாச்சார பண்பாட்டு பதிவுகளும் வைக்கப்பட்டுள்ளன.
தமிழர் தேசம் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதை டெனிஸ் மக்களுக்கும் மற்றைய இன மக்களுக்கும் எடுத்துரைக்குமுகமாக Middelfart KulturØen நகரில் உள்ள நூலகத்தில் கண்காட்சி நடைபெறுகின்றது.

தாயக விடுதலைக்காக விலைமதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்த எமது மக்களையும் ,மாவீரர்களின் தியாகங்களையும் பேணிக்காக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் – டென்மார்க்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here