சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த சனிக் கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நடத்திய பேச்சின் போது தனக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்தார்.
இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸின்; தரப்பில் சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் அரசதரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமை யிலான குழுவினருக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங் கிரசுக்கும் இடையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெறவில்லை.
அதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று முன்தினம் கொழும்புக்கு அழைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் சுமார் 4 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் எவரை ஆதரிப்பது என்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தேர்தல் தொடர்பில் இவ்விரு கட்சிகளும் இதுவரை தமது முடிவை அறிவிக்க வில்லை.
அதேவேளை, இவ்விரு கட்சிகளும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் சரத் பொன் சேகாவை ஆதரித்திருந்தன.
இந்தத் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு சிறி லங்கா முஸ்லிம் காங் கிரஸ் முன்வைத்த கரையோர முஸ்லிம் மாவட்ட கேரிக்கையை மைத்திரிபால சிறி சேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும், முஸ்லிம் காங்கிரசும் பொது நிலைப் பாட்டை எடுக்கலாம் என்று ஊகங்கள் வெளி யாகி யுள்ளதாக இவ் வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.