பெங்காலி மொழியில் ஐ.எஸ். இன் அடுத்த தாக்குதல் அறிவிப்பு!

0
382

சர்வதேச நாடுகள் பலவற்றாலும் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பானது, உயிர்த்த ஞயிறு தினமான 21ஆம் திகதியன்று இலங்கையில் நடத்திய கொடூரமான தாக்குதலில் 260 இற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

இந்த கொடூர சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிலிருந்து மீண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருகிறது. தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகள் பலரையும் கைது செய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்து எந்த நாட்டில் தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதை பெங்காலி மொழியில் எழுதப்பட்ட சுவரொட்டியின் மூலம் ஐஎஸ் அமைப்பு சூசமாக அறிவித்துள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐஎஸ் அமைப்பு ஒரு சுவரொட்டியின் மூலம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. அந்த சுவரொட்டியில் பெங்காலி மொழியில், “விரைவில் வருகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சுவரொட்டி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

அதாவது பங்களாதேஷ் அல்லது மேற்கு வங்கத்தில் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதையே அந்த சுவரொட்டிகள் கூறுவதாக தெரிகிறது என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று இந்த சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் அப் இந்தியாவின் தகவல்களின்படி, அல் முர்சுலாட் என்றழைக்கப்படும் குழுவின் சின்னத்தையும் இந்த சுவரொட்டியில் பதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பானது உள்ளுரில் செயல்பட்டு வரும் ஜமாதுல் முஜாகிதீன் (JMB) என்கிற பயங்கரவாத பிரிவினரின் மூலம் ஏற்கனவே வங்காளதேசத்தில் வலுவான பிடியைக் கொண்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பாக JMB அமைப்பு, மேற்கு வங்கத்தில் உள்ள பல மாவட்டங்களில் இளைஞர்களை தங்களுடைய அமைப்பில் சேருமாறு கூறியிருந்தது என்பதையும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here