புங்குடுதீவு 8 ஆம் வட்டாரம்,மடத்துவெளி பிரதேசத்தில் ஒருவர் வேப்பமரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த “பெரியாம்பி” எனும் பெயருடைய நபரே இன்று காலை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இறந்த இடத்தில் ஒரு நஞ்சு போத்தலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா அல்லது கொலைசெய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டாரா என்பது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 6மணிக்கு இது சம்பந்தமாக ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுபடுத்தப்பட்டும், காவல்துறையினர் பகல் 12மணிக்கே சம்பவ இடத்துக்கு சமுகமளித்திருந்தார்கள்.
இதையிட்டு மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளார்கள்.
அண்மைக்காலமாக புங்குடுதீவில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களால் புங்குடுதீவு மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள்.