உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாவலப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் இவுஹயூம் சாதிக் அப்துல்ஹக் மற்றும் மொஹமட் இவுஹயூம் ஷாஹித் அப்துல்ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல்களின் பின்னர், இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பொலிஸார் வௌியிட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.