சாய்ந்தமருது பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்த பெண்னொருவரும் சிறுமியொருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.