பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்படுவது மே மாதம் 06 திகதி வரை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனைத்து அரசாங்க பாடசாலைகளும் முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி திறக்கப்படவிருந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
ஆயினும் மீண்டும் புதன்கிழமை (24) ஆரம்பிக்கப்படவிருந்த அனைத்து பாடசாலைகளும் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆயினும் தற்போது, மேலும் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சபை இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.