தாக்குதல் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்!

0
794

தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழீழத்திலும், சிறீலங்காவிலும் 21.04.2019 அன்று உலக கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் மனித நேயமற்ற மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் இறுதி வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அவ் உறவுகளை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் காயமடைந்த அனைவருக்கும் எமது ஆறுதலையும் கூறி நிற்கின்றோம்.

இந்த தருணத்திலே பொதுமக்களைக் குறிவைத்து அதிலும் குறிப்பாக தமிழ் மக்களை அழிக்கும் நோக்கோடு நடத்தப்பட்ட இக் கொடூர தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேற்படி தாக்குதலானது மிகத்திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டும் அது தொடர்பில் எந்த வித முன்னேற்பாடுகளையும் பாதுகாப்புத் தரப்பு செய்யாத நிலையை ஆழமாக நோக்குகின்ற போது இத் தாக்குதலானது சிறீலங்கா அரசின் அனுசரணையுடன் நடத்தப்பட்டதாகவே எண்ணத் தோன்றுகின்றது. இவை அரசியல் நகர்வுகளின் பின்புலன்களாகவே இருக்கும் என்பதே உண்மையாகும்.

இத் தாக்குதல் நடவடிக்கையினை சிறீலங்கா புலனாய்வுக்கட்டமைப்புக்கள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அனைத்துத் தரப்புக்களும் கேள்விகளை தொடுத்து நிற்கும் வேளையில் மிகச் சாதாரணமாக தம்மிடம் தவறு உள்ளது மன்னிப்புக் கேட்கின்றோம் என பதில் வழங்கியிருக்கிறார்கள்.

சிறீலங்கா புலனாய்வுக் கட்டமைப்புகளின் நெறிப்படுத்தலிலேயே முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் 1980களின் இறுதிக் காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்துவது  தமிழ் – முஸ்லீம் உறவுகளை சீர்குலைப்பது  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவர்களின் ஆளுகைப் பகுதிகளுக்குள்ளேயே பாரிய நெருக்கடிகளை கொடுப்பதே இந்த ஆயுதக் குழுக்களின் நோக்கமாக இருந்தது. ஆயினும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இந்த இரகசிய நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட்டது .

தமிழீழ விடுதலைப்புலிகளின் எதிர் நடவடிக்கைகளால் பின்னடைவுகளை சந்தித்த போதும், சிறீலங்கா புலனாய்வுக் கட்டமைப்புகள் தொடர்ந்தும் ஆயுதங்களையும்ரூபவ் பயிற்சிகளையும், நிதியையும் வழங்கி முஸ்லீம் ஆயுதக் குழுக்களை கட்டியமைப்பதில் தீவிரம் காட்டின. அத்துடன் முஸ்லீம் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாக பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு அதில் பாரிய வெற்றியையும் கண்டிருந்தார்கள்.

சிறீலங்கா இராணுவ கட்டமைப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட முஸ்லீம் ஆயுதக் குழுக்களே மிலேசத்தனமாக படுகொலைகளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொண்டிருக்கின்றன. சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக நடமாடாத பகுதிகள் தெரிவுசெய்யப்பட்டதோடுரூபவ் சிறீலங்கா ஆட்சிப்பீடத்தோடு தொடர்புபட்ட தரப்புகள் பாதிக்கப்படாத வகையில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் பாரிய இலக்கொன்றை அடைவதற்கான இரகசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலானது என நாம் நோக்குகிறோம்.

அதேவேளை நான்கு தசாப்த கால விடுதலைப் போராட்டத்தின் போது ஒரு வெளிநாட்டவர் கூட இலங்கைத்தீவில் இலக்குவைக்கப்படவில்லை. ஆனால் சுமார் ஒருமணி நேரத்துக்கு குறைவான கூட்டிணைக்கப்பட்ட தாக்குதலில் குறைந்தது 38 வெளிநாட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களே தாக்குதலாளிகளின் பிரதான இலக்குகளாகஇருந்துள்ளனர். இவை பயங்கரவாதத்தின் உண்மையான முகத்தை விடுதலைப்போராட்டங்களுக்கு எதிரான தரப்புகளுக்குதற்போதாவது உணர்த்தியிருக்கும் என்ற எமது மக்களின் கருத்துக்களையும் இந்த தருணத்தில் கோடிட்டு காட்டவிரும்புகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரிலே தமிழினம் கொடூரமாக
அழிக்கப்பட்டு பத்து ஆண்டு நிறைவைக் காணுகின்ற இத் தரணத்திலே மீண்டும் தமிழினம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதை அனைத்துலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கடமையாகும்.

சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்துக்கு எதிரான தமிழின அழிப்பிற்கானநீதியான சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையே தமிழர்களுக்கு எதிரானசிங்கள அரசின் தொடர் தாக்குதல்களுக்கு வழிசமைத்து நிற்கின்றது.எனவே தமிழீழ மண்ணிலும், உலெகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு எமதுதாயத்தில் அமைதியாகவும், சுதந்திரமாகவும் உரிமைகளுடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளை வேண்டிநிற்கின்றோம்.

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்||

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here