வவுனியா – தாண்டிக்குளத்தில் கொல்களத்திலுள்ள கழிவுக்குழியில் வீழ்ந்து நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
குழியில் ஏற்பட்ட நச்சுவாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் தெரிவித்தார்.
37 வயதான S.T.சந்தனசாமி , 40 வயதான S. செல்வராசா , 27 வயதான V.சசிகுமார் மற்றும் 38 வயதான P.வசந்தகுமார் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நகர சபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக பணியாற்றியவர்களே உயிரிழந்துள்ளனர்.