தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கை முழுவதும் தற்போது தீவிர சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
சந்தேகத்திற்கிடமான வாகனங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
பல பிரிவுகளாக பொலிஸ் படை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கான பல வீதிகள் மூடப்பட்டு சோதனையிடப்படுகிறது.
கொழும்பு மாத்திரமன்ற நாட்டின் முழு பகுதியும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர்.
திருகோணமலை பிரதான வீதியில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வீதி ஓரத்தில் உள்ள வாகனங்கள் அப்புறப்படுத்தப் பட்டத்துடன் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது … பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பில் ஒரு மணித்தியாலயத்திற்குள் குண்டு வெடிக்க போகின்றதாக புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதால் இப்போது அனைத்து அரசாங்க கட்டடத்தில் உள்ளவர்களை உடன் வெளியேறும்படி படையினர் கூறி பணியாளர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் .