பிலிப்பைன்ஸின் லுசோன் (Luzon) தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று (22ஆம் திகதி) மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதில் அப்பகுதியிலுள்ள விமான நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, குறைந்தது இரண்டு கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, பம்பாங்கா மாகாணத்தில் சேதமடைந்துள்ள கட்டடத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாகாணம் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதா நம்பப்படுவதாக, அம்மாகாண ஆளுநர் லிலியா பினேடா தெரிவித்துள்ளார்.