நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) என்ற இஸ்லாமிய பிரிவினைவாத குழு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தாக்குதலை நடத்தியுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தக் குழு JMI என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாகவும் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
குண்டு வெடிப்புகளில், 38 வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலாக, 321 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதில் 521 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.