நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் நல்லடக்க ஆராதனை!

0
251

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆராதனை வழிபாடுகள் இன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியெங்கும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை, 3 தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொற்கொள்ளப்பட்டது.

இதில் இதுவரை 310 பேர் கொல்லப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் நீர்கொழும்பு கட்டான கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.

நீர்கொழும்பு – கந்தான, கருவப்பிட்டிய செபஸ்தியார் ஆலய தற்கொலை குண்டு தாக்குதலில் பலியாகிய மக்களில் அடையாளம் காணப்பட்ட 60 பேரின் உடல்களை அடக்கம் செய்யும் நிகழ்வு இன்று காலை முதல் நடைபெறுகிறது.

பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையில் குண்டு தாக்குதல் நடந்த ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது அங்கு பலத்த பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டதுடன் குறித்த ஆலயப் பகுதியெங்கும் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் சோகக் காடாக கட்சியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here