இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் இருக்கும் பிரெஞ்சு பிரஜைகளுக்கு பிரான்சு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் 207 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் இலங்கை காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை பெற 01.43.17.51.00 அல்லது 00.94.11.26.39.442ஆகிய தொலைபேசி இலக்கங்களை அழைக்கும்படி Quai d’Orsay வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பில் உள்ள பிரெஞ்சு தூதரகம், பயணிகளை பொது இடங்களில் கூடவேண்டாம் எனவும், புதிய இடங்களுக்கு பயணிக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் வெளிநாட்டவர் 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் பாதிப்புக்குள்ளானதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.