தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டிய நாதஸ்வரக் கலைஞர்கள் விசாரணைக்கு!

0
342

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கல் நடைபெற்றது.

குறித்த ஆலயத்தில் சப்பரம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ எழுச்சிப் பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே சிறிலங்காவின் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here