தியாகி அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ். பல்கலைக் கழகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார், மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் T.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.