தாயகம் வந்து ஒரு மாதம் விழாக்கள், பண்டிகை, காதுகுத்து, கல்யாணம், கருமாதி எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு போகும் போது மட்டும் ஏதோ நிமிடத்துக்கு சம்பளம் எடுக்கும் பில்கேட்ஸ் மாதிரி நினைத்து நேரம் மிச்சம் பிடிச்சு இரவிரவாக சிற்றுந்து சாரதியை ஓடச் சொல்லி அவரோ காலை 3 மணிக்கு புத்தளம் தாண்ட எங்காவது விபத்தாகி அவரும் மரணித்து நீங்களும் மரணித்து இதுக்கு பதில் ஒரு நாளைக்கு முன்னர் கிளம்பி கொழும்பில் எங்காவது தங்கிவிட்டு பகல் பிரயாணம் செய்தால் அடுத்த விடுமுறைக்கு நாட்டுக்கு வர முடியும் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும் .
நீங்கள் நினைப்பது போல் 5 மணி நேரத்திலேயே அல்லது 6மணி நேரத்தில் air port செல்ல முடியுமா? சிந்திப்போம் இது ஒன்றும் வெளிநாட்டு high way இல்லை.அவ்வளவு அனுபவம் கூடிய ஓட்டுநர்களும் இங்கு இல்லை.
வாகனங்கள் booked பண்ண முதல்ல விசாரியுங்கள்.ஓடும்போது தொலைபேசியில் இருப்பார்கள் சில ஓட்டுநர்கள்.
வெற்றிலிலை போடுவது போல போதை பொருள்கள் போடுவார்கள்.
சற்று விசாரியுங்கள் பிறகு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.
சற்று சிந்திப்போம் எம் அருமை உறவுகளே, உயிர் இழப்பினை தடுப்போம்.
முக்கியமான ஒரு விடயம் சில இளைஞர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் இடம் வான் எடுத்து தரும் படியும் மாதாந்தம் பணத்தினை தாங்கள் செலுத்துவதாகவும், அவர்களும் உழைப்பதற்கு ஒரு வழி என உதவுகிறார்கள். ஆனால், அனுபவம் இல்லாத அந்த இளைஞர்கள் படும்பாடு உயிர் மாயும் வரை தொடர்கிறது….!
(சிந்தியுங்கள் செயற்படுங்கள்!)