பாரிசின் மிகவும் பழைமை வாயந்த வரலாற்றுத் தேவாலயமாகிய Notre-Dame-de-Paris இல் சற்று முன்னர் 19h00 மணியளவில் பாரிய தீ பற்றியுள்ளது. உடனடியாககத் தீயணைப்பப் படையினர் களத்தில் இறங்கியும் தீ கட்டுக்குள் அடங்கவில்லை.தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், தேவாலயத்தின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயம் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் தமது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.