இத்தாலியில் 1994 இல் சாவடைந்தவரின் உடலம் சாவகச்சேரியில் அஞ்சலிக்கு!

0
1039

25 வருடங்களிற்கு முன்பு இத்தாலியில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தவரின் சடலம் அவரது சொந்த இடமான சாவகச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொழில் நிமித்தம் இத்தாலிக்கு புலம்பெயர்ந்திருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம். ஸ்ரீரிபன் ஜோர்ஜ் என்பவர், இத்தாலியில் பணியாற்றி வந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி தனது 49 ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.

அவர் தனது இறுதி ஆசையாக தனது சொந்த உடலத்தை தனது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினை பொறுப்பேற்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

இதனால் இறந்தவரின் மனைவி இத்தாலி நாட்டிற்குச் சென்று கணவரின் உடலினை பார்வையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இறந்தவரின் உடல் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here