வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்!

0
545

வவுனியாவில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்படுகின்றது.

நாட்டில் வரட்சியான காலநிலை நீடித்து வருகிறது. அந்த வகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர், சிறிநகர் ஆகிய கிராமங்களில் 225 குடும்பங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம் மக்களுக்கு நாள் தோறும் நான்காயிரம் லீற்றர் நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இரு கிராமங்களிலும் 4 நீர்தாங்கிகள் வைக்கப்பட்டு அவற்றின் மூலம் நீர் விநயோகிக்கப்படுவதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேசத்தில் காஞ்சுரமோட்டைப் பகுதி வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இக் கிராமத்தில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து அவர்களுக்கான குடிநீரை விநியோகித்து வருகின்றது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here