யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சரித்தி புகழ்மிக்க தமிழீழ தேசத்தின் சேனையை வரவேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு இன்றைய நாளன்று இடம்பெற்றது. சுமார் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முகமாலைக்கு வருகை தந்தனர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் சிறப்பு மிக்க நிகழ்வாக ஏ9 நெடுஞ்சாலை திறப்பு அமைகிறது. ஓயாத அலைகள் 3 நடவடிக்கை மூலம் ஆனையிறவை விடுதலை புலிகள் கைப்பற்றிய பின் தமிழரின் ஆளுமை முகமாலை வரை நிறுவப்பட்டது. 2002 அமைதிப்பேச்சு பேச்சுக்களை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த ஏ9 நெடுஞ்சாலை 08/03/2002 திறக்கப்பட்டது.
7 ஆண்டுகள் சிங்கள அடக்குமுறைக்குள் சிக்கித் தவித்த மக்கள் அமைதிப் பேச்சுக்களினூடான 08/03/2002 பாதை திறப்பைத்தொடர்ந்து பெரும் ஆரவாரத்துடன் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் திக்குமுக்காடும் அளவிற்கு 50ஆயிரத்திற்கு மேற்பட்ட யாழ். மக்கள் புலிகளை வரவேற்க வந்தனர். சிங்கள இனவெறி ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னால் தங்கள் பாதுகாவலர்களை தோள்களில் சுமந்து மேள தாளங்களுடன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கையசைத்தபடி ஊர்வலமாகச் சென்றனர். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்தில் மக்கள் திரண்டு தங்களின் பாதுகாவலர்கள் புலிகள் என்பதை உலகிற்கு காட்டினர்.