டென்மார்க் நாட்டின் Herning நகர Gymnasium பாடசாலையில் தமிழ் இன அழிப்பை வெளிப்படுத்தும் கண்காட்சியும், விரிவுரைகளும் இடம் பெற்றன.
கேர்ணிங் வாழ் தமிழ் மாணவர்களும், டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியமும், இணைந்த ஏற்பாட்டில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் ஆவணக்
கண்காட்சிகளும் விரிவுரைகளும் 05.04.19 அன்று நடைபெற்றுள்ளன.
இவ் கண்காட்சியிலும், விரிவுரைகளிலும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலைகளையும், ஆக்கிரமிப்புகளையும்
இந்த நிகழ்வு தாங்கி நின்றுள்ளது. அத்துடன் தமிழர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டும்
பொருட்கள், கலை, கலாச்சார பண்பாட்டு பதிவுகள் வைக்கப்பட்டு, அது பற்றிய விளக்கங்களும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் தேசம் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதை 1000க்கு மேற்பட்ட டெனிஸ் மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றைய இன மக்களும் இவ் நிகழ்வை பார்வையிட்டுள்ளனர்.
தாயக விடுதலைக்காக விலைமதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்த எமது மக்களையும், வீரர்களின்
தியாகங்களையும் பேணிக்காக்க வேண்டியது தமிழர்கள் ஆகிய எங்களுடைய கடமையாகும்.