நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நிலையான அமைதி நிலை இலங்கையில் ஏற்படமாட்டாது!

0
520

நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் சிறிலங்கா மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், இலங்கை  அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக, ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளார். 

இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியானது. குறைந்தபட்சம், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இலங்கையில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமை காணப்படுகிறது.

எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது என்று தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here