விமானங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொள்வனவு செய்யும் துருக்கியின் திட்டத்திற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜெட் விமானங்களுக்கு இந்த ஏவுகணைகள் அச்சுறுத்தலாக அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பொறுப்பற்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னர், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பினராக நீடிப்பதா அல்லது அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதா என்பது குறித்து துருக்கி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், S-400 என்ற குறித்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பினைக் கொள்வனவு செய்யும் திட்டமானது நிறைவடைந்த ஒரு திட்டமென துருக்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான நெருங்கிய இராஜதந்திர உறவுகளை, துருக்கி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.