வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் அதிகரித்து காணப்படும் நிலையில் இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக வவுனியாவில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 2018ம் ஆண்டு அதிகமான நோயாளர்கள் எமது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
எலிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் 70ஆண்களும் 20 பெண்களும் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இந்த வருடம் மார்ச் மாதம் வரை 23 ஆண்களும் 8பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள். எலிக்காச்சல் நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் வயல்களில் பணிபுரிவதே. வயல்களில் உள்ள எலியின் சிறுநீரில் இருந்தே கிருமி மனிதர்களை தாக்குகின்றது.