மெக்சிகோ எல்லையை மூடுவேன் – டிரம்ப் மிரட்டல்!

0
240

அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிகோ எதையும் செய்வதில்லை. அவர்கள் பேசத்தான் செய்கிறார்களே தவிர செயலில் காட்டுவதில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வேடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பணத்தை பல்லாண்டு காலமாக எடுத்துச்செல்கின்றனர். தெற்கு எல்லையை மூடி விட எண்ணுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் டுவிட்டரில் நேற்று முன்தினம் மேலும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் அல்லது எல்லையின் பெரும்பகுதியை மூடி விடுவேன்” என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here