பிரான்சு கொலம்ஸ் பிறாங்கோ தமிச்சங்க ஆண்டுவிழா!

0
527

பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான கொலம்ஸ் என்ற மாநகர பிறாங்கோ தமிழ்ச்சங்கம் தனது 5 ஆவது ஆண்டின் தமிழ்ச்சோலை மாலை நிகழ்வினை நடாத்தியிருந்தது. 23.03.2019 சனிக்கிழமை 1.00 மணிக்கு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர முதல்வர் Maire Nicole GOUETA ,Rachid CHAKER Vie Associative et Relations Internationales. Conseiller territorial.Hervé HEMONET Circulation, Stationnement, Transports. இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறைவாத்தியத்துடன் வரவேற்று அழைத்து வரப்பட்டனர். நிகழ்வின் விருந்தினர்கள் மற்றும் சங்கத்தின் தலைவர், செயலாளர், நிர்வாகி மற்றும் உறுப்பினர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டு, வணக்க நடனம், சிறுவர் கதம்பம், நாடகம், தாளலயம்,இசைக்கச்சேரி, கவிதைகள், திருக்குறள்,ஆங்கிலப்பாடல்கள், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு போன்ற மாணவர்களின் ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன. மாநகர முதல்வர் மற்றும் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரெஞ்சு முக்கியஸ்தர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு பொன்னாடையும், சந்தன மாலையும் அணிவித்து தலைவர், செயலாளர் போன்றோரால் மதிப்பளிக்கப்பட்டனர். முதல்வர்; அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழர்களின் கலை கலாசாரத்தை தான் கேள்விப்பட்டிருந்தாலும் நேரடியாக காண்கின்றமை மிகுந்த சந்தோசம் என்றும். தமிழ் மக்களை அவர்கள் மொழியையும், பாண்பாட்டையும், பற்றுதலையும் பல தமிழ்க் குழந்தைகள் அழகாக தமது மொழியையும் கலைநிகழ்வை செய்யும் போது மிகுந்த தனக்கும் தனது பகுதி மக்களுக்கும் சந்தோசத்தையும் ஏற்படுத்துகின்றது என்றும், தமிழ் மக்களுக்கு உதவிடுவதற்கு தனது மாநகரம் எப்பொழுதும் தயாராகவுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாகவும், ஆசிரியராகவும் பணியாற்றுகின்ற மற்றொரு பிரெஞ்சு பிரமுகர் கதைக்கும் போது கூறினார். தான் பல மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் கற்ப்பித்தும், பயிற்ச்சியளித்தும் வருவதாகவும் மற்றைய இனத்தைச் சேர்ந்த பலருக்கு தான் விளையாட்டின் போது பல தண்டனைகளை கொடுத்திருப்பதாகவும் ஒருமுறையேனும் தமிழ்பிள்ளைகள் அந்தத் தண்டனைக்கு உள்ளாகவில்லை ஆனால் மிகவும் கெட்டித்தனமானவர்கள் என்பதையும் இவ்வாறு சங்கம் வைத்து அடுத்த தலைமுறையை நல்ல பிரசைகளாக வளர பாடுபடுவதே காரணம் என்பதையும் கூறியிருந்தார். தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக தேர்வுப் பொறுப்பாளர் திரு. அகிலனால் மதிப்பளிக்கப்பட்டார். உரையும் ஆற்றியிருந்தார் தமிழ்ச்சோலை மாணவர்கள் ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்தார். தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும் பங்கு கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளித்திருந்தார். தொடர்ந்து சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் கொலம்ஸ் பிறாங்கோ தமிழ்ச்சங்கம் 5 ஆவது ஆண்டில் தனது இரண்டாவது ஆண்டு தமிழ்ச்சோலை நிகழ்வை சிறப்பாக நடாத்தி வருவதையும், இத்தனை வருட காலம் சங்கத்தின் வளர்ச்சியில் உழைத்த அனைவரையும் பாராட்டியதுடன். உலகில் பல்வேறு ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்த போது பிரெஞ்சுமொழியில் கொலம்ஸ் (மாடப்புறா) என்று அழைக்கப்படும் புறாவை தனது மாநகரத்தின் பெயராகவும், சின்னமாகவும் கொண்ட இந்த மாநகரசபையும், அதன் மக்களும் தமிழ்மக்களும் பெருமைக்குரியவர்கள் என்றும் புறா என்ற பறவை மட்டும் தான் எந்த மதமோ, நிறமோ,மொழியே, சாதியே என்ற வேறுபாடுகள் இல்லாது எல்லா இடங்களிலும் வீடோ, கோயிலோ, பாடசாலையோ, வைத்தியசாலையோ, புகையிரதநிலையமோ எல்லா இடங்களில் தனது கூட்டைக்கட்டி தனது இனத்தை பெருப்பிக்கின்றது என்பதும் அப்படி அதையொட்டி பெயர் கொண்டு இருக்கின்ற இந்த மாநகரம் வரும் காலத்தில் சிறப்பு மிக்கதொரு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற இடமாக இருக்க வேண்டும் என்றும் அதனை கொலம்ஸ் பிறாங்கோ தமிழ்ச்சங்கமும், இங்கு வாழும் தமிழ் மக்களும் நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரான்சு தேசத்தில் வரப்போகின்ற தேர்தல்களும் அதன் முக்கியத்துவமும், அதனால் தமிழ் மக்கள் எமக்கு சாதமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாவீரர் பேச்சுத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கியும் மதிப்பளித்திருந்தார். தமிழ் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. ஆண்டு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தலைவர் உரையும் இடம் பெற்றது. ஏனைய பிரதேசங்களில் இருந்தும் தமிழ்ச்சங்க தலைவர்கள் பொறுப்பாளர்கள நிர்வாகிகளும், ஆண்டு விழா வந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர். தாயக உணவுகளை எமது மக்களுடன், குழந்தைகளும், பிரெஞ்சு மக்களும் உண்டு மகிழ்ந்தனர். தமிழ்ச்சோலை செயலாளர் நன்றியுரையைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் இனிதே சிறப்புடன் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here