2018 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டன.
இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய எந்தவித மாணவர்களும் இடம்பெறவில்லை.
மேலும் பெறுபேற்று விகிதத்தின் அடிப்படையில் மன்னார் 69.34%, வவுனியா 68.28%, யாழ்ப்பாணம் 67.02%, முல்லைத்தீவு 60.4% ,கிளிநொச்சி 54.3%, சதவிகித தேர்ச்சியே பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மற்றும் காலி மாவட்டங்கள் 77 சதவிகித சித்தியையும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்கள் 79 விகித பெறுபேற்றையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.