முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் ஆதரவாளர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பலர் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனர்.
எனினும் தற்போது இந்த குழு இரண்டாக உடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலர் இது குறித்து தற்போதும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.