லண்டனில் நேற்றைய தினம் ஐந்து இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்து இருக்கிறது. லண்டனில் இளைஞர்கள் மீதான கத்திக்குத்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து அதனைத் தடுக்கும் வழி முறைகளைக் கண்டறிவதில் பிரித்தானியா அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தலைநகர் லண்டனில் சராசரியாக வாரத்துக்கு ஓர் இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இளைஞர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவது குறித்தும் அரசு திட்டமிட்டு வருகிறது. இதேவேளை கடந்த 23.03.2019 சனிக்கிழமை
London Pinner ல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பலியானவர்
வரணி இடைக்குறிச்சியை பிறப்பிடமாக கொண்ட கதிர்காமர் ரவி ( வயது 55) இவர் வரணி குருக்கள் குடியிருப்பவரை சேர்ந்தவர். இவர் Holland ல் வாழ்ந்து பின்னர் London Croydon லும் Swindon மற்றும் Wembley பகுதியில் வசித்தார். தற்போது இவர் குடும்பம் Watford ல் வாழ்ந்து வருகிறார்கள்.
.