தொடருந்து கட்டுப்பாட்டாளர்களும் சாரதிகளும் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்போது, தொடருந்துத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, தொடருந்து கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.