ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2019 நேற்று 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை கிறித்தல் பகுதியில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 2001 ஆம் ஆண்டில் திருகோணமலைக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். ஆதவன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு. கிருபா, ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் மற்றும் விளையாட்டுத்துறை உறுப்பினர்கள் வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வரவேற்று போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலை வரை 14 கழகங்கள் பங்குபற்றிய 7 போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. தொடர்ந்து அடுத்துவரும் வாரங்களிலும் போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெறும் என ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் கி. கிருபானந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)