பிரான்சில் செல் தமிழ்ச் சங்கம் (செல் தமிழ்ச் சோலை) ஆரம்பிப்பதற்கு முக்கிய பங்களித்தவரும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும், எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின்அவர்களுக்கு இன்று (23.03.2019)
செல் தமிழ்ச் சங்கத்தால் நினைவு வணக்க நிகழ்வு நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசப்பற்றாளருக்கு அஞ்சலி செலுத்தினர்.