முல்லைத்தீவில் சகோதரர் அடிதடி: அண்ணன் படுகொலை!

0
446

-murder4-600முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.

 புதுவருடத்துக்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளைப் பகிர்வதில் இரு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு அடிதடியாக மாறி பின் கொலையில் முடிந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில்  இடம்பெற்ற இந்த இந்த சம்பவத்தில் ஆனந்தன் கவிராஜ் (வயது 19)   என்பவரே  உயிரிழந்தவராவார்.
 குறித்த இளைஞனுக்கும் அவரது 18 வயதான இளைய சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில் இளைய சகோதரன் மின்னழுத்தியால் குறித்த இளைஞனைத் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது இளைஞனின் உடல் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொலை செய்ததாகக் கூறப்படும் தம்பியை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் நடராஜா சுதர்சன்  உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here