இலங்கை தொடர்பான பிரேரணை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவு!

0
213

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மேலும், இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இரண்டு வருடங்களுக்கு பிரியோசனம் இல்லாத ஒரு சபைக்குள் பாதிக்கப்பட்டுள்ள நாம் முடக்கப்பட்டுள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்களாக வீதியில் போராடிவரும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவொரு பாரிய பின்னடைவு. எமது மக்களை ஏமாற்றும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது“ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here