⛳️நினைவுகளெப்போதும் மாறாது மறக்காது⛳️
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புக்கு உரியவர்கள் அனைவருக்கும் வணக்கம்!
எதுவும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன் எழுத வைத்துவிட்டான் பவுஸ்ரின்.
எல்லோருக்கும் முன்மாதிரியாய் இருந்தவன் இன்று எம்மோடு இல்லை என்பது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பார்த்தவன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவில் உள்ளது.
என்ன செய்யப் போகின்றோம் சக தோழனுக்கு பிரியாவிடை கொடுக்கும் நேரம் நெருங்கி வருகிறது இதற்காகவேனும் ஒன்றாய் நிற்போமா?
எத்தனையோ விடையத்துக்கு அர்த்தத்தோடும் அர்த்தம் இன்றியும் சண்டை பிடித்திருக்கின்றோம் மனங்களிலே காயங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம் சிலதை மனதில் வைத்து இன்றுவரை மறக்காமல் வஞ்சம் தீர்க்க அல்லது குறை காண ஒரு சந்தற்பத்தை எதிர்பார்க்கிறோம். இவற்றில் எதிலும் அடங்காதவன் பவுஸ்ரின் மாறாத புன்னகையும் கோபம் இல்லா முகமும் அவன் அடையாளம்.
முகம் மாற்றி முகவரி மாற்றி பலர் இருந்த இடம் தெரியாமல் ஓடிய போதும் ஓடாமல் ஒரே இடத்தில் என்ன நடந்தாலும் நாம் உறுதியாய் நிற்போம் என்று நின்றவன்.
தலைவர் இல்லை எல்லாம் முடிந்து விட்டது இனி போராட்டம் அவ்வளவுதான் யாரும் எமக்கு இல்லை எம்மை கேள்வி கேட்கவும் யாரும் இல்லை என்று இருதவர்களில் வித்தியாசமானவன் பவுஸ்ரின். இனித்தான் மச்சி நாங்கள் கூட உழைக்க வேண்டும் தலைவர் எங்களுக்கு நிறைய வேலை தந்து இருக்கிறார் நம்மளை நம்பித்தானே மச்சி இவ்வளவு பொடி பொட்டையள் மாவீரராய் போனதுகள்.
எங்கட சனமெல்லாம் பாவம் மச்சி யார் வந்தாலும் யார் போனாலும் நாங்கள் நிப்பம் எங்கட சனம்தானே பேசினால் பேசட்டும் நாங்கள் சனத்திட்டப்போவம் நிலைமையை சொன்னால் எங்கட சனம் உதவும்.
கோயில்லையும் கல்யாணவீடுகளிலும் எங்கட சனம் எவ்வளவு காசை கரியாக்குது மாவீரர் தந்த வாழ்க்கைதானானே இது எங்கள் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்குது அதை மறக்ககூடாது என்று காணும் பொழுதெல்லாம் பேசியவன் இன்று உயிர் அற்ற உடலாக அன்னிய தேசத்தில் கிடகிறான். ஓய்வறியாப்பணியாளன் உறங்கிக்கிடக்கிறான். அவன் நடந்த தெருவெல்லம் தேடுகின்றன எங்கே இவனைக்காணோமென்று.
எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்போம் நாம் கேள்வி கேட்காமல் கொடுக்கும் வேலையை செய்யும் பண்புள்ள செயற்பாட்டாளன். நிகழ்வுகளில் சீருடையுடன் வா என்றால் எதோ ஒரு குறையோடு வருவான் என்னடா என்றால் இல்ல மச்சி வேலையால் வாறன் அதுதான் என்று சிரித்தபடி சொல்லும் அந்த உயர்ந்த மனிதன் இன்று எம்மிடம் இல்லை என்பதை மனம் என்னமோ ஏற்க மறுக்கிறது.
காணும் பொதுகளில் என்ன மச்சி பொடியளோட கதைச்சனியோ கதை மச்சி நாங்கள் செய்யாமல் யாரு செய்யிறது அங்க கை கால் இல்லாமல் இருக்குதுகள் இஞ்ச நாம சும்ம என்னண்டு இருக்குறது வா நாங்கள் லாச்சப்பலுக்கு போய் கடைக்காறரோடு கதைப்பம் எங்கட சொத்துக்களை வைச்சிருக்கிறவங்கள் மனம் இரங்காட்டியும் மற்றவங்கள் செய்வான்கள்.
இந்த அம்மன் கோயில் என்னவாம் ஏதும் செய்வாங்களோ?
நாம வேலரோடு கதைப்பமோ அது நம்மட கோயில் தானே சனத்துக்கு உதவாட்டி எதுக்கு இதெல்லாம் நாங்கள் எல்லோரும் வீடுவிடாய் போய் சனத்தோடு கதைத்து எல்லத்தையும் உருவாக்கி விட இப்ப சனம் கஸ்ரப்படுகுது வச்சிருக்கிறவங்கள் தங்கட சொந்தம் மாதிரி கதைக்குறானுகள்.
நீ மச்சி பொடியளோடு கதை சனத்திட்ட இறங்கச்சொல்லு சனம் தரும் எவ்வளவு நம்பிக்கை அதுதான் பவுஸ்ரின்.
இந்த நிமிடவரை பதவிச்சுகமும் கதிரைக் கனவோடு திரியும் மனிதர்கள் மத்தியில் மேடையில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாகாக இருக்கும் போலி தேசியவாதிகள் மத்தியில் வித்தியாசமானவன் பவுஸ்ரின்.
தனிப்பட்ட எவரின் குறை நிறையை அவனோடு பழகிய நாட்களில் என்றும் பார்த்தது இல்லை. வீட்டில் சில நேரம் சிக்கல் இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் இருப்பான் நான் நோண்டி நோண்டி கேட்டால் மட்டும் ஒருசில வார்த்தைகளில் முடியும் பதில் மட்டும் சொல்வான்.
TRO என்னவாம் சுந்தரவேல் என்னவாம் ஏதும் கதைச்சனியா கதை மச்சி இனியும் இப்படி இருக்கேலாது எண்டு சொல்லு அது எங்கட கட்டமைப்பு நோக்கம் மறந்து நிக்கேலாது விக்ரர் அண்ணக்கு சொல்லு அவர் அவங்களோட நல்ல மாதிரித்தானே நீ கதை மச்சி நாம கொஞ்சப்பேர்தான் பழைய ஆட்கள் நிக்கிறம் விசயம் தெரிஞ்சாக்கள் தான் கதைக்கலாம் என்று அடிக்கடி சொல்வான்.
அவனை பற்றி முழுமையாக எழுத என்னால் முடியவில்லை பொய்யாகவும் எழுத மனம் வரவில்லை எம்விடுதலைப்போராட்டம் அதன் வரலாற்றை எழுதும் பொழுது புலத்தில் அவன் பெயரும் நிச்சயம் இருக்கும் அதுவரை காத்திருப்போம்.
உன் கண்கள் காணத எங்கள் தாய்மண் விடுதலையை உன் பிள்ளைகளின் கண்ணூடே நீ காண்பாய்.
கனவு மெய்ப்படட்டும் கண்ணுறங்கும் தோழனை வழியனுப்பி வைப்போம் வாருங்கள் நன்றி.
நினைவுகளோடு தோழன்