ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளில் ஒன்றான கென்யாவிலுள்ள கல்குவாரியில் பணியாற்றி வந்த 36 பேர் மர்ம நபர்களினால் சரமாரியாக சுட்டுப்படு கொலை செய்யப்பட்டுள்ள அதேவேளை பலர் கழுத்து அரிந்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர் பாக மேலும் தெரிய வருவதாவது, கென்யாவின் மேன்டிரா கவுண்டியில் இரு ந்து 10 மைல் தொலைவில் கல்கு வாரி உள்ளது.
இந்த குவாரியில் பணியாற்றிய தொழிலாளர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள கூடாரத்தில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்களினால் நள்ளிரவில் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினான்.
மேலும் 4 பேரின் தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை மேன் டிரா கவுண்டியின் ஆளுநர் அலி ரோபா உறுதி செய்துள்ளார்.
கென்யாவின் அண்டை நாடான சோமாலியாவில் அல் சஹாப் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களை ஒடுக்கும் வகையில் கென்யா கடந்த 2011ஆம் ஆண்டு தனது படையை அனுப்பி உள்ளது.
இதில் இருந்து கென்யா நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் பேருந்தில் சென்ற 28 பேரை தீவிரவாதிகள் கொலை செய்தது குறி ப்பி டத்தக்கது.