ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.ஜேர்மனியில் இருந்து சுமார் 450 பேர், சிரியாவிற்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களில் 150 பேர் நாடு திரும்பி விட்டதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தது.
இந்நிலையில், மக்கள் நெரிசல் மிகுந்த வடக்கு ரினே வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடும் வேட்டையில் 240 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைதானவர்களுக்கு சொந்தமான எண்ணற்ற கட்டிடங்களில் அதிரடி சோதனைகளையும் பொலிசார் நடத்தியதாக தெரிகிறது.
மேலும், கைதானவர்கள், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதற்காக தேவாலயங்கள், பள்ளிக்கூடங்களில் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.