வடதமிழீழம் கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கிளிநொச்சியிலுள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று ( செவ்வாய்க்கிழமை ) மூடப்பட்டுள்ளன.
மேலும் கிளிநாச்சி சேவை சந்தை தொகுதி மூடப்பட்டுள்ளமையால் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதுடன் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச திணைக்களங்கள், பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மாணவர் வருகை இன்மையால் பாடசாலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஶ்ரீலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் பூரண பணிப்புறக்கணிப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.