யாழிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கிச் சென்ற சிற்றுந்து நேற்று அதிகாலை புத்தளம் நாகவில்லுப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மாதக் கர்ப்பிணிப்பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தில் உயிழந்தவர்களின் விபரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இக் கோரவிபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணிப் பெண்ணான அகல்யா (வயது 27) மற்றும் யாழ்ப்பாணம் சிவன் பண்ணை வீதியைச் சேர்ந்த மதியாபரணம் மகேஸ்வரி (வயது 67), மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த சிவானந்தன் சரோஜினி (வயது 53) மற்றும்
வவுனியா தேக்கந்தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மோகன்ராஜ் லக்ஸன் (வயது 30) சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதிலே உயிரிழந்துள்ள 5 மாதக் கர்ப்பிணிப் பெண் கட்டு நாயக்க விமான நிலையத்திலி ருந்து தனது கணவனை அழைக்கச் சென்றவேளையே இக்கோர விபத்து இடம்பெற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.