மொஸாம்பிக்கைத் தாக்கிய இடாய் புயலினால் 1000 பேர் உயிரிழப்பு!

0
497

கிழக்கு ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கை (Mozambique) தாக்கிய இடாய் புயலினால் சுமார் 1,000 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என, அந்நாட்டு ஜனாதிபதி பிலிப்பே நியுஸி ( Filipe Nyusi) தெரிவித்துள்ளார்.

புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆறுகளில் மிதந்ததை காணக்கூடியதாக இருந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மணித்தியாலத்திற்கு 177 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய இந்த இடாய் புயலினால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி பிலிப்பே நியுஸி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இதேவேளை, பெய்ரா நகரில் ஏற்பட்ட தாக்கத்தினால் கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. உதவியாளர்கள் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here