மட்டக்களப்பின் தமிழினத்தை பிடித்துள்ள பீடையாக தற்கொலை மரணம் தினம் ஒரு செய்தியாக மனதை கிலேசப்படுத்துகின்றது. அண்மைய ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னால் சொல்லப்படும் காரணம் பாரதூர மானதாக இல்லை. ஆனால், உயிரிழப்பு குறைந்த பாடில்லை. தயவுசெய்து ஏன் தமிழினத்தில் மாத்திரம் இப்படியான வயது வேறுபாடின்றி தம்முயிரை அழிக்கின்றார்கள். இதற்குத் தீர்வுதான் என்ன? இதை கொஞ்சமெனும் தடுக்க செயற்திட்டம் மந்த நிலையில்தான் உள்ளது.
கரடியனாறு பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (18/01) தூக்கிட்டு தற்கொலை!
சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வகையில், 2018 ஆம் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்கள் 75 பேர்.
2019 யில் 15 நாட்களுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தோர் 06 பேர்.
அதேபோல்
தீயினால் மரணித்தவர்கள் :02
நீரில் மூழ்கி மரணித்தோர் :03
நஞ்சருந்தி மரணித்தோர் :02
வீதி விபத்தினால் மரணித்தோர் :07
அவ்வாறே 2018 ஆம் ஆண்டில்
தூக்கிட்டு மரணித்தோர் :75
தீயினால் மரணித்தோர் : 11
நஞ்சருந்தி மரணித்தோர் :33
வீதி விபத்தினால் மரணித்தோர் ;70
நீரில் மூழ்கி மரணித்தோர் : 12
நாய்க்கடிக்குள்ளாகி மரணித்தோர் :02
புகையிரதத்தில் தற்கொலை :02
பாம்பு கடித்து மரணித்தோர் ; 02
யானை தாக்கி மரணித்தோர் 02
முதலை கடித்து மரணித்தோர் ;02
துப்பாக்கி சூட்டில் மரணித்தோர் :02
( வவுணதீவு பொலிஸார் தவிர)
பால் புரைக்கேறியதால் மரணித்தோர் : 05
பிறந்தவுடன் மரணித்தோர் : 03