நெதர்லாந்தின் உட்ரெக் நகரில் பயங்கரவாத தாக்குதல்:மூவர் பலி!

0
392

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரின் 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இன்று காலை வேலைக்கு செல்ல டிராம் வண்டியில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, டிராம் தொடருந்தினுள் க்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து வந்த பொலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நெதர்லாந்தின் உட்ரெக் நகரில் சென்று கொண்டிருந்த டிராம் தொடருந்தினுள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து, டிராமில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அந்த வாகனாமனது இணைப்பின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள டிராம் நிலையத்திற்கு அருகே உள்ள சதுக்கத்தில் அதிகாரிகள் குவிந்துள்ளனர். மேலும் அங்கு அவசர சேவைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் காரில் தப்பிச் சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜோஸ்ட் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஜோஸ்ட் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நகரம் முழுவதும் டிராம் ரயில் சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here