ஊடகவியலாளர் அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கிறோம் – யாழ். பல்கலைஆசிரியர் சங்கம்!

0
122

jaffna_uni_2 (1)இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் நடந்த நடக்கின்ற அநீதிகளிற்கு எதிராக தமது உயிர்களைப் பணயம் வைத்துப் போராடுகின்ற ஊடகவியலாளர்கள் இன்று பாரிய பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப் பட்டுள்ளார்கள். இது மீண்டும் வடபகுதியில் சட்டம் ஒழுங்கு அற்ற நிலை தோன்றுவதற்கான ஆயத்தமோ என எண்ணத் தோன்றுகிறது.

எம்மக்கள் மாற்றத்திற்காகவும் நல்லாட்சிக்காகவுமே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார்கள். ஆனால் இன்று நிலைமை எதிர்மறையாகவே தோன்றுகிறது.

இது எமது நாட்டில் அமைதி நிலவுவதற்குக் குந்தகமாக அமையலாம். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஊடகவியலாளர் சுதந்திரமாக தமது செய்திகளை வெளியிட அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும்.
செய்திகள் தவறானவையாக இருந்தால் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான எந்த நடவடிக்கையும் எமது நாட்டிற்குப் பாதமாகவே அமையும்.

எனவே சம்பத்தபட்டவர்கள் இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து இவ்வாறான செயல்கள் இனிமேலும் நடைபெறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடக நண்பர்களே நீங்கள் தொடர்ந்தும் துணிவுடனும் நேர்மையுடனும் எமது சமூகத்திற்காகக் குரல் கொடுங்கள். மக்கள் என்றும் உங்களுடன் இருப்பார்கள்.

அ. இராசகுமாரன்
தலைவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here