யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுகாதாரத் தொண்டர்கள் சுமார் 10 பேர் பதாதைகளை ஏந்தியவண்ணம் தமக்கு வேலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டார்கள்.
வலிகாமம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தது சம்பந்தமான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் வெளியில் இடம் பெற்றது.
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகத் நாம் சுகாதாரத் தொண்டர்களாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளிலும் கடமையாற்றியுள்ளோம். எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காது தொண்டர்களாகக் கடமையாற்றாதவர்களுக்கு கடந்த காலத்தில் ஒரு அரசியல் கட்சி தம்மை ஏமாற்றி நியமனங்களை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இதேவேளை தாம் கடந்த காலத்தில் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரியாக இருந்த வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தள்ளார்கள்.
இந்த விடயத்தில் வடமாகாண அமைச்சு உரிய கவனம் எடுத்து தமது நியமனத்தை உரிய முறையில் வழங்கவேண்டும் எனக்கோரி இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.