மட்டக்களப்பு செங்கலடி காயங்குடா பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜெனிஸ்டன்(12வயது)சிறுவன் தமது தாய் வேறுதிருமணம் முடித்து வெளியூரில் வாழ்கின்றார். தந்தை அம்பாறை நைனாக்காட்டில் கல்வாடியில் வேலை செய்கின்றார். சிறுவன் பெற்றோர் கவனிப்பின்றி தமது உறவினர் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை நேரம் இச்சிறுவனும் இன்னுமொரு 6வயது சிறுமியும் தனியாக காயங்குடா ஆற்றில் நீராடச் சென்ற வேளை தமது அண்ணாவை நீர் இழுத்து செல்லுவதை அவதானித்த 6வயது சிறுமி தமது மழலை மொழியால் உதவி கேட்டு அழுதுள்ளது. அயலவர் குரலை கேட்டு ஆற்றில் பாய்ந்து சடலைத்து எடுத்து நேற்றிரவு செங்கலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் கையளிக்கப்படும் .
உயிரிழந்த ஜெனிஸ்டன் பற்றி அவரது பாடசாலை ஆசிரியர்கள் மிகவும் சோகத்துடன் கூறுகையில் பாடசாலையில் அமைதியான கீழ்படிவான திறமையான மாணவனாக இருந்தமையால் இம்மாணவன் மீது அனைவருக்கும் அபிமானம் இருந்தது. பெற்றோரின் குடும்பத்தகராறு, தாயின் மறுமணம் உரிய கவனிப்பின்றி வளர்ந்த சிறுவனின் இடரை காலனுக்குக் கூட சகிக்கமுடியாமல் சிறுவயதிலே உயிரை பறித்துவிட்டான். இச்சிறுவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். என்று தெரிவித்தனர்.