
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கத்தில் பங்கேற்க வந்த, பிரான்ஸ் நாட்டின் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி அந்தோணிருசேல், 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு அந்தோணிருசேல் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சை வந்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தினை சுற்றிப்பார்த்துவிட்டு மதியம் உணவுக்காக வெளியே செல்ல முயன்ற அந்தோணிருசேலை போலீஸார் மறித்துள்ளனர்.
அப்போது அந்தோணிருசேல் உடனடியாக 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட உத்தரவை காட்டி, போலீசார் கேட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து அவர் புதுச்சேரி சென்று பிரான்ஸ் தூதரகத்தில் முறையிட்டார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிறநாட்டு மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்வது மனிதநேயமற்ற செயலாகவும். இதனால் வேண்டாத எதிர்விளைவுகளே இது ஏற்படுத்தும்.இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை இதுபோன்ற செயல்களால் குறையும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கலந்துரையாடல் கூட்டத்தில்தான் அவர் பங்கேற்க இருந்தார். ஆனால் அவரை எதற்காக இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என தெரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேண்டாத எதிர்விளைவுகளையே இது ஏற்படுத்தும் என்றார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற இருந்த கலந்துரையாடல் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.