
இப்படுகொலைக்கு நீதியான விசாரணை நடாத்தப்பட்டு , குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வலியுறுத்துவதோடு, மேலும் உயிர்களை நாம் இழக்கும் நிலை உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கின்றது .
ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அனைத்து தமிழக தொப்புள் கொடி உறவுகளோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தனது கரங்களை தோழமையுடன் இணைத்துக் கொள்கிறது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை