யாழ்ப்பாணம் – கொடிகாமம், கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் சைக்கிளொன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (08) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.